Asianet News TamilAsianet News Tamil

MK STALIN : காலையிலையே மகளிருக்கு குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. என்னன்னு தெரியுமா?

1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்கள் பெறுவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாதத்தில் இருந்து புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப் போகிறோம் என கூறியுள்ளார். 

Chief Minister Stalin has said that magalir urimai thogai will be given to an additional 1.48 lakh people this month KAK
Author
First Published Jul 5, 2024, 8:00 AM IST

சூடு பிடிக்கும் விக்கிரவாண்டி தேர்தல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் விக்கிரவாண்டியில் முகாமிட்டுள்ளனர். இதினடையே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சார வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,   வரும் ஜூலை 10-ஆம் நாள் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல்மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்துக்கு, உங்கள் உள்ளம் கவர்ந்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

 

இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டியதில்லை! உங்கள் மண்ணின் மைந்தர் அவர்! மக்களோடு மக்களாக, மக்கள் பணியாற்றும் மக்கள் தொண்டர்தான் அன்னியூர் சிவா. 1986-ஆம் ஆண்டு முதல், அன்னியூர் சிவாவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தடம் மாறாத - நிறம் மாறாத கலைஞரின் உடன்பிறப்புகளில் அவரும் ஒருவர். தலைவர் கலைஞரின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், ”தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கும் ரத்த நாளங்களில் ஒருவர்”.

மெட்ரோவுக்காக இடிக்கப்படும் 250 ஆண்டு பழமையான கோவில்! ஒற்றை கேள்வியால் திமுகவை திக்கு முக்காட வைத்த அண்ணாமலை!

மகளிர் உதவித்தொகை

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது! 1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்கள். இந்த மாதத்தில் இருந்து புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப் போகிறோம்!  மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.  ’நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக, இளைஞர்கள் அனைத்து வேலைகளையும் பெற தகுதி உள்ளவர்களாக உயர்த்தப்பட்டு வருகிறார்கள். ‘புதுமைப்பெண் திட்டம்’ மூலமாக, அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக் கல்விக்கு வரும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது.

Chief Minister Stalin has said that magalir urimai thogai will be given to an additional 1.48 lakh people this month KAK

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு

இதே மாதிரி, மாணவர்களுக்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் மூலமாக தரப் போகிறோம். இப்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதாவது ஒரு நேரடி பலன் கிடைக்கும் வகையில், நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது.திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றாலே, சமூகநீதி அரசு! இது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்! பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்துறையை உருவாக்கியதே தலைவர் கலைஞர்தான். வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு  20 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கிய ஆட்சி, தி.மு.க. ஆட்சி! பட்டியலின சமூகங்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்த ஆட்சி, தி.மு.க. ஆட்சி. அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை, ‘சமத்துவ நாளாக’ அறிவித்திருக்கிறோம்!

Chief Minister Stalin has said that magalir urimai thogai will be given to an additional 1.48 lakh people this month KAK

தேர்தலில் பாடம் புகட்டுங்கள்

கழகம் வளர்த்த கொள்கைக் குன்றான ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் பலியான சமூகநீதிப் போராளிகளுக்கான நினைவகம் கட்டிக் கொண்டிருக்கிறோம். இது இரண்டையும் சீக்கிரமே விழுப்புரத்தில் நான் திறந்து வைக்க இருக்கிறேன். சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க. கூட்டணியை தோற்கடிப்பது மூலமாக, சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்ளுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

பாஜகவிற்கு எதிராக களமிறங்கும் எடப்பாடி.! மத்திய அரசை எதிர்த்து போராட்டத்திற்கு தேதி குறித்த அதிமுக

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios