Asianet News TamilAsianet News Tamil

கலாஷேத்திராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா.? நடந்தது என்ன.? முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

 கலாஷேத்திராவில் மாணவிகளுக்கு பேராசியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டிற்கு  உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Chief Minister Stalin has said that a proper investigation will be conducted regarding sexual harassment of girl students in Kalashetra
Author
First Published Mar 31, 2023, 12:48 PM IST

 கலாஷேத்திராவில் மாணவிகளுக்கு பேராசியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக  தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பின்கள் பிரச்சனையை எழுப்பினர். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அந்த பதிலில்,  ஒன்றிய அரசினுடைய துறையின்கீழ் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய, கலாச்சாரத் கலாஷேத்திரா பவுன்டேஷன் விவகாரத்தைப் பொறுத்தவரை, தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து "பாலியல் தொல்லை" என டுவிட்டர் செய்தி போட்டு. 21-3-2023 அன்று நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி.-க்குக் கடிதம் எழுதியது. இது தொடர்பாக. கலாஷேத்திரா பவுன்டேஷன் இயக்குநர், நமது மாநில காவல் துறைத் தலைவரைச் சந்தித்து, தங்களது நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். 

Chief Minister Stalin has said that a proper investigation will be conducted regarding sexual harassment of girl students in Kalashetra

பிறகு தேசிய மகளிர் ஆணையமே "நாங்கள் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி அடிப்படையில் அவ்வாறு விசாரித்தோம்; அந்த விசாரணையை முடித்து வைத்து விட்டோம்" என 25-3-2023 தெரிவித்திருக்கிறார்கள். அன்று டி.ஜி.பி-க்குக் கடிதம் எழுதி பின்னர். கடந்த 29-3-2023 அன்று மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே வந்து கலாஷேத்திராவில் இருக்கக்கூடிய 210 மாணவிகளிடம் விசாரித்து விட்டுச் சென்றுள்ளார். அப்போது காவல் துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல் துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலையில்,

Chief Minister Stalin has said that a proper investigation will be conducted regarding sexual harassment of girl students in Kalashetra

மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்திரா பவுன்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள், இந்த விவகாரம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு. விவரங்களை அறிந்தேன். இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்காக, வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டார்கள்.

Chief Minister Stalin has said that a proper investigation will be conducted regarding sexual harassment of girl students in Kalashetra

இன்று காலையில், மீண்டும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று. மாணவிகள் மற்றும் நிருவாகத்தினருடன் பேசி வருகிறார்கள். மேலும், அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அரசைப் பொறுத்தவரை. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! பேராசிரியர்கள் மீது நடவடிக்கை.? நள்ளிரவிலும் கலாஷேத்ராவில் தொடர்ந்த போராட்டம்

Follow Us:
Download App:
  • android
  • ios