Asianet News TamilAsianet News Tamil

வேன் கவிழ்ந்து 7 பெண்கள் துடி துடித்து பலியான சம்பவம்..! மிகுந்த வேதனை தருகிறது- ஸ்டாலின் இரங்கல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் 7 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
 

Chief Minister Stalin has announced relief assistance after a van overturned near Tirupattur killing 7 women Kak
Author
First Published Sep 11, 2023, 11:04 AM IST

வேன் கவிழ்ந்து 7 பெண்கள் பலி

சுற்றுலா சென்று விட்டு வேனில் சொந்த ஊர் திரும்பும் போது திருப்பத்தூர் மாவட்டம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்தநிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தும் இழப்பீடு அறிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 24 நபர்கள் கடந்த 8-9-2023 அன்று தனியார் சுற்றுலா மினி பேருந்து மூலம் பெங்களூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று (11-9-2023) சொந்த ஊர் திரும்பி வரும் பொழுது....

Chief Minister Stalin has announced relief assistance after a van overturned near Tirupattur killing 7 women Kak

முதலமைச்சர் இரங்கல்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சண்டியூர் என்ற இடத்தில் வாகன பழுது காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியன் ஓரத்தில் நிறுத்தி சரி செய்து கொண்டுருந்தனர். அப்போது இதில் பயணித்த பயணிகள் நிறுத்தப்பட்ட வாகனத்தின் முன் அமர்ந்திருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி மினி பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதி ஏற்பட்ட விபத்தில் பழுதடைந்த வாகனத்தின் முன்னால் அமர்ந்திருந்த..

 திருமதி செல்வி (எ) சேட்டம்மாள், க/பெ.பழனி (வயது 55), திருமதி மீரா. க/பெ முனுசாமி (வயது 51), திருமதி தேவகி க/பெ.சண்முகம் (வயது 50), திருமதி கலாவதி க/பெ.குப்புசாமி (வயது 50), திருமதி சாவித்ரி, க/பெ குப்பன் (வயது 42). திருமதி.கீதாஞ்சலி, க/பெரஞ்சித் (வயது 35) மற்றும் திருமதி தெய்வானை க/பெ திலிப்குமார் (வயது 32) ஆகிய ஏழுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 

Chief Minister Stalin has announced relief assistance after a van overturned near Tirupattur killing 7 women Kak

உதவி தொகை அறிவித்த முதலமைச்சர்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும் இவ்விபத்தில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் அவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

சுற்றுலா சென்று திரும்பிய வேன் மீது டிப்பர் லாரி மோதி விபத்து.. துடிதுடித்து பெண்கள் உட்பட 7 பேர் பலி
 

Follow Us:
Download App:
  • android
  • ios