டிஜஜி விஜயகுமார் தற்கொலை.! அதிர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்- கோவைக்கு விரையும் உயர் போலீஸ் அதிகாரிகள்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவை சரக டிஐஜியாக பணியாற்றியவர் விஜயகுமார், இன்று காலை பந்தய சாலையில் உள்ள முகாம் அலுவகத்திற்கு வந்தவர் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கி சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கோவை டிஐஜி விஜயகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காவல்துறை உயர் அதிகாரிகள் கோவைக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இந்தநிலையில் விஜயகுமார் மறைவு தொடர்பாபக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.விஜயகுமார்,இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பெருமை சேர்த்தவர்.
அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.