தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது,தகுதி உள்ளவர்களுக்கு கண்டிப்பாக ரூ.1000 -ஸ்டாலின் உறுதி

தகுதியுள்ள அனைவருக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்கின்ற வரைக்கும். திராவிட மாடல் அரசின் இந்தப் பணி நிச்சயம் தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

Chief Minister Stalin assured that magalir urimai thogai will be given to those who are eligible KAK

மகளிர் உரிமைத்தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பயனாளிகளுக்கான திட்டங்களை தொடங்கிவைத்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், கடந்த சில நாட்களாக காய்ச்சலும், தொண்டை வலியும் எனக்கு இருந்தது. இப்போது காய்ச்சல் குறைந்துவிட்டாலும், தொண்டை வலி மட்டும் இருக்கிறது என்னுடைய குரலை கேட்கும்போதே உங்களுக்கு நன்றாக தெரியும்.

அதனால்தான், சில நாட்களாக வீட்டிலேயே முழு ஓய்வு எடுத்துக்கொண்டேன் இந்த வாரம் முழுக்க ஓய்வெடுக்க வேண்டும் என்று என்னுடைய மருத்துவர்கள் சொன்னாலும் என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியவில்லை.  அதனால்தான் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி மூலமாக இணைந்திருக்கின்ற உங்களை எல்லாம் நான் பார்க்க வந்துவிட்டேன். 

Chief Minister Stalin assured that magalir urimai thogai will be given to those who are eligible KAK

தொண்டை வலி- தொண்டில் தொய்வு

தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது! அதனால்தான் வந்துவிட்டேன் உங்களை பார்க்கும்போது என்னுடைய உடல் வலி எல்லாம் குறைந்து மனது மகிழ்ச்சியில் நிறைந்துவிட்டது! இந்த ஆயிரம் ரூபாயை வாங்கும்போது உங்களுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியைவிட கொடுக்கும்போது, எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படுகிறது அந்த மகிழ்ச்சியைவிட சிறந்த மருந்து எதுவாக இருக்க. முடியும்? அதனால்தான், மருத்துவர்கள் அறிவுரையையும் மீறி இந்த விழாவுக்கு வந்துவிட்டேன். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பாகவே சொன்னோம்.  அப்போது சிலர் என்ன சொன்னார்கள். என்ன சொன்னார்கள் என்றால். "இதையெல்லாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி", "இவர்கள் ஆட்சிக்கு வரவே மாட்டார்கள்" இதுமாதிரி ஒவ்வொருவரும் நிறைய சொன்னார்கள். கட்டம் எல்லாம் பார்த்தார்கள். ஆனால் நீங்கள் எல்லோரும் என்ன சொன்னீர்கள்?

"தி.மு.க.தான் ஆட்சிக்கு வரவேண்டும்" “தி.மு.க சொன்னால் சொன்னதை நிறைவேற்றும் கலைஞர் மகன் ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரவேண்டும்" என்று ஓட்டு போட்டு பதிலடி தந்தீர்கள் கட்டளைக்கு கட்டுப்பட்டவன் நான்! ஸ்டாலின் சொன்னால், உங்களின் இந்த முத்துவேல் கருணாநிதி சொன்னதை நிச்சயம் செய்வேன்! அதற்கு அடையாளமாகதான், மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்குகிறோம். அரசு சார்பில் வெளியிடப்பட்டு, தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை குடும்ப அட்டைதாரர்களையும் விண்ணப்பிக்க சொன்னோம். இந்தத் திட்டத்தின் நோக்கத்தையும், விதிமுறைகளின் குறிக்கோளையும் மக்கள் உள்ளார்ந்து புரிந்து கொண்ட காரணத்தால், 2 கோடியே 24 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களில், 1 கோடியே 63 இலட்சம் மகளிர் மட்டும் விண்ணப்பித்தார்கள்!

Chief Minister Stalin assured that magalir urimai thogai will be given to those who are eligible KAK

இரண்டாம் கட்ட பணி தொடக்கம்

மக்களுடைய இந்த புரிதல், இந்தத் திட்ட விதிமுறைகளுக்கான நியாயத்தை காண்பித்தது. விமர்சித்தவர்கள் அமைதி ஆகிவிட்டார்கள் இப்படி விண்ணப்பத்தவர்களிலிருந்து, 1 கோடியே 6 இலட்சத்து 58 ஆயிரத்து 375 தகுதியுள்ள மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு, எல்லோருக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்கில், இந்தத் திட்டம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாகவே அதாவது செப்டம்பர் 14-ந் தேதியே அந்த மாதத்திற்கான உரிமைத்தொகையான 1000 ரூபாயை நாம் வரவு வைத்தோம். இவ்வளவு பெரிய திட்டம்! ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள்! அவர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய்! ஆனால், எந்தச் சிறிய புகாருக்கும் இடமில்லை! அதுதான். இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி! அந்தப் பெருமிதத்துடன் சொல்கிறேன். 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்திருக்கக்கூடிய திட்டம்!

ஒரு திட்டம் பெற்ற வெற்றியை தொடர வேண்டுமென்றால் அதை தொடர்ந்து கவனிக்கவேண்டும்! அதனால், முகாம்களில் விண்ணப்பித்து, தகுதி முகாம்களில் இருந்தும் பெறப்பட்ட விண்ணப்பதாரர்கள் சரிபார்க்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்படாத விண்ணப்பங்களில் விண்ணப்பங்களும் விண்ணப்பதாரர்களுக்கும், பதிவாகாமல் தரவுகளை போன தொடர்ந்து இதற்காக மட்டுமே அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏறக்குறைய 54,220 அலுவலர்கள் மாவட்ட அளவிலும், கிராம அளவிலும் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சரி பார்த்து ஒரு பட்டியலை எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அதில் இந்த மாதத்திலிருந்து, 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 

Chief Minister Stalin assured that magalir urimai thogai will be given to those who are eligible KAK

தகுதி உள்ளவர்களுக்கு உதவி தொகை

உங்களுக்கான 1000 ரூபாயை நேற்றே உங்கள் வைக்கப்பட்டுள்ளது!  கணக்கில் வரவு உங்களுடன் சேர்த்து. மொத்தம் 1 கோடியே 13 லட்சந்து 84 ஆயிரத்து 300 பேர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1000 ரூபாய் இனி பெறப்போகிறார்கள். நீங்கள் மட்டுமல்ல, தகுதியுள்ள யாரும் விடுபட்டுவிட கூடாது என்று விண்ணப்பித்தவர்கள் கவனமாக இருக்கிறோம். தேர்ந்தெடுக்கப்படவில்லை அதானல்தான், என்றால் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற காரணத்தை குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தோம். அந்தக் காரணம் ஏற்புடையதாக இல்லையென்றால், மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு கொடுத்தோம் அதை பயன்படுத்தி, மேல்முறையீடு செய்தார்கள். அவர்களுடைய பரிசிலனை செய்து கொண்டிருக்கிறோம். 

விண்ணப்பங்களையும் சரிபார்ப்பு அலுவலர்கள் களஆய்வு செய்து, தகுதிபெறும் மகளிருக்கு, வருகிற டிசம்பர் மாதத்தில் இருந்து 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' மூலமாக 1000 ரூபாய் வழங்கப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்கின்ற வரைக்கும். திராவிட மாடல் அரசின் இந்தப் பணி நிச்சயம் தொடரும். கடந்த மார்ச் 27-ந்தேதி சட்டமன்றத்தில் இந்தத் திட்டத்தைப் பற்றி பேசும்போது, ஏறத்தாழ 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1000 ரூபாய் வழங்கிடும் வகையில் இந்தத் திட்டம் அமையும் என்று நான் சொன்னேன். ஆனால். இன்றைக்கு, 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 பயனாளிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

20 முறை கடிதம் கொடுத்தாச்சு.. எந்த நடவடிக்கையும் இல்லை- ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்- நீதிமன்றம் அதிரடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios