குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை..! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட புதுவை முதலமைச்சர்
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை, மாணவிகளுக்கு மடிக்கணினி என பல்வேறு புதிய அறிவிப்புகளை புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு கப்பல் சேவை
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த 10ம் தேதி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உரையுடன் துவங்கியது, அப்போது பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், கவர்னர் உரையை தொடர்ந்து சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. புதுவை அரசு யூனியன் பிரதேசமாக இருப்பதால் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் அந்ததவகையில், சுமார் 11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு, புதுச்சேரி அரசு கோரிக்கை வைத்திருந்தது. இதனை ஏற்ற மத்திய அரசு .10 ஆயிரத்து 692 கோடி மதிப்பிலான நிதிக்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து இன்று புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சரும் நிதி அமைச்சர் பொறுப்பை வகிக்கும் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.1கோடியிலிருந்து 2 கோடியாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உயர்நிலை பள்ளி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி மீண்டும் துவங்கப்படும். கோயில்களில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும், காரைக்காலில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசம் துறைமுகத்துக்கு, பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவை தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம், காத்திருங்கள்... ஸ்டாலின் அறிவிப்பால் அலறும் சென்னை!!!
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000
மேலும் சென்னை-புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டது. பொதுமக்கள் அரசு போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் 25 இ-பேருந்து, 50 இ-ஆட்டோக்கள் வாங்கப்படும். புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படும். காரைக்காலில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும்.11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள், 10 ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக அரசு பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு இலவச மனை பட்டா, புதுச்சேரியில், 21 வயது முதல் 57 வயது வரையுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பல்வேறு அறிவுப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்