சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் SIR எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டவாரியான வரைவு வாக்காளர்கள் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகிகின்றனர்.

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

இதேபோல் சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு முன்பாக சென்னையில் மொத்தமாக 40,04,694 வாக்காளர்கள் இருந்த நிலையில் திருத்த பணிகளுக்கு பிறகு 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இப்போது 25,79,676 வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் இதோ:

சென்னையில் இறந்த வாக்காளர்கள் 1,56,555

முகவரியில் இல்லாதவர்கள் 27,328

குடி பெயர்ந்தோர் 12,22,164

இரட்டை பதிவுகள் 18,772

மொத்தமாக நீக்கப்பட்டவர்கள் 14,25,018