Chennai topped Do you know why?
பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை நகரம் முதலிடம் பெற்றுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 6 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதில் டெல்லி நகரம் முதலிடத்தில் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் கடைசியில் சென்னை நகரம் உள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை, சென்னை உள்பட 6 பெரு நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது. இந்த பட்டியலில் தலைநகர் டெல்லியில் தான் பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லி மாநகரில் 13,808 குற்ற வழக்குகள் பெண்களுக்கு எதிராக பதிவாகியுள்ளன. அதாவது, ஒரு லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னையில் 43 லட்சம் பெண்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக 544 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
ஒரு லட்சம் பெண்களில் 12 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் பட்டியலில் முதலிடத்தில் சென்னை உள்ள நிலையில், மும்பை, கொல்கத்தா உள்ளது.
