Chennai Recovered as a Mechanic Skeleton How did you find out
சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது மாயமானவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு எலும்புக் கூடுகள் கிடைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பலத்த மழையால் சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த கனமழை வெள்ளத்தில் தாம்பரம், முடிச்சூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த வெள்ளத்தால் மக்கள் கடுமையான இன்னல்களுக்கு உள்ளானார்கள். ஏராளமானோர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். மேலும் பலபேரின் நிலைமை என்ன ஆனது என்றே இதுவரை தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த கனமழை வெள்ளத்தின் போது முடிச்சூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஏ.சி.மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த வந்த அருண்குமார் இவருக்கு 24 வயது. இவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அப்போது அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அருண் குமார் காணாமல் போனதாக இதுகுறித்து அவர் வேலை பார்த்த நிறுவனத்தினர் பீர்க்கண்கரணை போலீசில் புகார் செய்து கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் சமத்துவ பெரியார் நகர் பகுதியில் உள்ள அடையாறு ஆற்று கரையோர முட்புதரில் ஒரு மனித எலும்புக்கூடு கிடந்தது.
அந்த பகுதியை சேர்ந்த அப்பகுதி மக்கள் பீர்க்கண்கரணை போலிசாருக்கு தகவல் கொடுத்ததனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து எலும்புக் கூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார். அப்போது அங்குள்ள முட்புதரில் எளும்புகூடுக்கு அருகில் கிடந்த அடையாள அட்டையை கைப்பற்றினார். அதில் அருண்குமார் மற்றும் அவர் வேலைபார்க்கும் நிறுவனத்தின் பெயரும் குறிப்பிட்டு இருந்தது.
எனவே மீட்கப்பட்ட எலும்புக்கூடு பெருவெள்ளத்தின்போது மாயமான அருண்குமாருடையதாக இருக்கலாம் என்று போலீசார் நம்புகிறார்கள். மாயமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு எலும்புக்கூடுகள் சிக்கி உள்ளது.
மாயமான அருண்குமாரின் சொந்த ஊர் புதுக்கோட்டை ஆகும். இதுபற்றி அங்குள்ள அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் ரசாயன பரிசோதனைக்கு பின்னர் அவை அருண்குமாரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
சென்னை பெருவெள்ளத்தின் போது மாயமானவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு எலும்புக் கூடுகள் கிடைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
