Asianet News TamilAsianet News Tamil

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறல்- இண்டர்போல் உதவிய நாடும் போலீஸ்

சென்னையில் உள்ள 13 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். இமெயில் ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் இண்டர்போல் உதவியை சென்னை போலீசார் நாடியுள்ளனர். 

Chennai Police has sought the help of Interpol to trace the person who threatened the school with bombs KAK
Author
First Published Feb 9, 2024, 9:17 AM IST

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் நேற்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வந்தது. காலை 10.30 மணியளவில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து இமெயில் தொடர்பான தகவலை போலீசாருக்கு பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் பள்ளியில் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து ஒரு சில மணி நேரத்தில் அடுத்தடுத்து 13 பள்ளிகளுக்கு இமெயில் வந்தது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் வெளியே பரவிய நிலையில் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. மேலும் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு தங்களது குழந்தைகளை அழைத்து செல்ல தொடங்கினர்.

Chennai Police has sought the help of Interpol to trace the person who threatened the school with bombs KAK

ஒரே மெயிலில் இருந்து வந்த மிரட்டல்

இதனால் நேற்று முற்பகம் 11மணி முதல் பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் காணப்பட்டது. இதனை தொடர்ந்து  சென்னை பெருநகர கூடுதல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, மிரட்டல் குறித்து காலை 10:30 மணி அளவில் முதல் தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு Bomb Detection and Deactivation Squad அனுப்பப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், இது குறித்து பொது மக்கள் யாரும் பதற்றமடைய தேவையில்லை என கூறினார். மெயில் அனைத்தும் ஒரே இ மெயில் ஐ.டி.யில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,  வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரித்ததில் அது ஒரு புரளி என தெரியவந்துள்ளதாகவும், இ மெயில் அனுப்பிய நபரை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Chennai Police has sought the help of Interpol to trace the person who threatened the school with bombs KAK

இண்டர்போல் உதவியை நாடும் போலீஸ்

இந்தநிலையில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் சென்னை சைபர் கிரைம் போலீசார் திணறிவருகின்றனர். குறிப்பாக இமெயில் ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏற்கனவே இதே போல சென்னை எலியட்ஸ் கடற்கரையில் குண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட அதே மெயில் ஐடியில் இருந்து தற்போதும் இமெயில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த மிரட்டல் சம்பவத்திற்கு முற்றுக்கட்டை போடும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியை சென்னை போலீசார் நாடியுள்ளார். இண்டர்போல் உதவியோடு குற்றவாளிகளை கைது செய்யவும் போலீசார் தீவிர முயற்சி எடுத்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

Bomb Threat for Chennai Schools : சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Follow Us:
Download App:
  • android
  • ios