மக்களே உஷார்.! சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக தற்போது தேசிய அளவில் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 1,00,000-ஐ கடந்துள்ளது. சமீப நாட்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தினசரி பாதிப்பு 2000-ஐ கடந்து பதிவாகி வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன. சென்னையில் முகக்கவசம் அணிவதை நேற்று சென்னை மாநகராட்சி கட்டாயமாக்கியது.
மேலும் செய்திகளுக்கு.. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை வெளுக்க போகுது.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?
சென்னை மாநகராட்சி இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் இல்லையென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். வணிகவளாகம், திரையரங்குகள், மார்க்கெட் போன்ற மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி
வணிக நிறுவங்களின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அங்காடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !