Asianet News TamilAsianet News Tamil

சென்னை.. MTC பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்? கோயம்பேட்டில் சிக்கி தவிக்கும் பயணிகள் - எகிறும் ஆட்டோ மீட்டர்!

Chennai Rain Live Update : மிக்ஜாம் புயல் நெருங்குவதை அடுத்து "புயல் காலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் வழங்கியுள்ளதாக அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். 

chennai mtc buses operated in less number? passengers flooded in koyambedu chennai rain live updates ans
Author
First Published Dec 4, 2023, 10:10 AM IST

மேலும் சென்னை மீனம்பாக்கம் கண்காணிப்பகத்தில் மணிக்கு 82 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் பதிவாகியுள்ளது. மேலும் வானிலை நிலையத்தில் காலை 8.30 மணி வரை 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னையில் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சர்க்கரை நோய் ஓபி பிளாக், வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஆகவே அங்கு செயல்பட்டு வந்த அந்த வார்டு தற்போது உடனடியாக முதல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கேஎம்சி டீன் டாக்டர் முத்துசெல்வன் தெரிவித்துள்ளார். மேலும் கனமழை காரணமாக சென்னையில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை மக்களே உஷார்.. 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச அதிக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மேலும் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பாக சென்னையில் செயல்படும் 2,800 பேருந்துகளில் 600 பேருந்துகளை மட்டுமே MTC இயக்க முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கனமழை காரணமாக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இன்று பணிக்கு வரமுடியத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை ரயில் மற்றும் பேருந்துகளில் சென்னை வந்த பயணிகள், கோயம்பேடு, எழும்பூர், தாம்பரம் போன்ற போக்குவரத்து மையங்களில் சிக்கித் தவிக்கின்றனர். 

கனமழையால் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்; தத்தளிக்கும் நோயாளிகள்!!

இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்திக்கொண்ட வெகு சில ஆட்டோ ஓட்டுனர்கள் வெறும் 2-3 கிமீ போன்ற குறுகிய பயணங்களுக்கு கூட குறைந்தபட்சம் ரூ.500 கேட்கின்றனர் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை மற்றும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இன்று இரவு வரை கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios