கனமழையால் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்; தத்தளிக்கும் நோயாளிகள்!!
கனமழை காரணமாக தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அங்குள்ள நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறி உள்ளன. சாலையில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி இருப்பதனால் பல இடங்களில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், தாம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்ததால் அங்குள்ள நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெள்ளநீர் மருத்துவமனையின் தரைத்தளம் முழுவது சூழ்ந்துவிட்டதால் அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மழைநீர் தேங்கி நிற்பதால் அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இதையடுத்து அங்கிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்றும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து தண்ணீரை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அமைச்சர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... சூறாவளி காற்றோடு இரவு வரை கன மழை நீடிக்கும்.! சென்னை மக்களுக்கு ஷாக் கொடுத்த வானிலை ஆய்வு மையம்