chennai met 170 accidents towards new year celebration

சென்னையில் ஒரே இரவில் 170 விபத்துக்கள்....ராஜீவ்காந்தி, ராயப்பேட்டை, ஸ்டான்லி மருத்துவமனையில்...

புத்தாண்டை ஒட்டி இளைஞர்கள் கார் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுவது வழக்கம். இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு,பொலிசார் எவ்வளவோ பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்,ஆண்டு தோறும் எப்படியும் விபத்துக்கள் ஏற்படுத்தி விடுகின்றனர்.

காரணம்

குடித்து விட்டு வேகமாக வாகனத்தை இயக்குவது

பைக் ரேசில் அதிகமாக ஈடுபடுவது தான் ...

அதுவும் பைக் ரேஸ் என்றால்,கிழக்கு கடற்கரை சாலையிலும்,மெரீனா பீச் அருகிலும் பைக் ரேசில் அதிகமாகவே ஈடுபடுவர்.

இதனையெல்லாம் காரணம் காட்டி, இந்த ஆண்டு புத்தாண்டு மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக சென்னை முழுவதும் போலீசார் கடும் கட்டுபாடுகளை விதித்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனையும் மீறி நேற்று இரவு ஒரே நாளில் சென்னையில் மட்டும் 176 இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளது.அதில் காயம் அடைந்த 200 கும் மேற்பட்டவர்கள் ராஜீவ்காந்தி, ராயப்பேட்டை, ஸ்டான்லி மருத்துவமனையில்...அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரெய்மான் (29), புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பும்போது எழும்பூர் லேன்ட்ஸ் கார்டன் சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, விபத்தில் சிக்கி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, காயம் அடைந்தவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.