chennai HC gives judgement on medical reservation
மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரி டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் நடந்த 2 வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் போராட்டத்துக்கு திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மருத்துவர்களின் . இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் உடனடியாக சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்டுள்ள மேல்முறையீடு வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நானை முக்கிய தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பின் எங்களது அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்’ என பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்தனர்.
