Asianet News TamilAsianet News Tamil

சென்னை.. "கல்யாணமான பெண்களுக்கு வேலை இல்லை".. Foxconn மீது பரபரப்பு குற்றச்சாட்டு - கம்பெனி கொடுத்த நச் பதில்!

iPhone Maker Foxconn : சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான Foxconn, தங்கள் நிறுவனத்தில் திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Chennai Foxconn married woman not getting hired foxconn answer over the row ans
Author
First Published Jun 27, 2024, 4:35 PM IST

Foxconn சென்னை 

இந்தியாவைப் பொறுத்தவரை, சென்னையில் செயல்பட்டு வரும் iphone தயாரிப்பு நிறுவனமான Foxconn, அதிக அளவிலான ஊழியர்களோடு செயல்பட்டு வரும் அதன் கிளைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை என்கின்ற பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று சில தினங்களுக்கு முன்பு முன்வைக்கப்பட்டது. 

Foxconn கொடுத்த விளக்கம் 

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள அந்த நிறுவனம், "தங்களுடைய நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில், சுமார் 25% பேர் திருமணமான பெண்கள் என்று கூறியுள்ளது. மேலும் மதம் மற்றும் பாலினம் உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல், தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் பாரபட்சமின்றி உலோகம் உள்ளிட்ட பொருட்களை அணியக் கூடாது என்கின்ற சட்டமும் தங்களுடைய நிறுவனத்தில் இருப்பதை அந்நிறுவனம் அரசுக்கு உறுதி செய்துள்ளது. 

“அடுத்த 10 ஆண்டுகளை கடந்தும் இந்தியா வெற்றிகரமான வளர்ச்சிப் பாதையில் தொடரும்..” பொருளாதார நிபுணர் நம்பிக்கை..

மேலும் இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தங்களால் வேலைக்கு அமர்த்தபடாதவர்களின் மூலம் கூறப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதுபோன்ற ஊடக அறிக்கைகள், வேகமாக வளர்ந்து வரும் இந்திய உற்பத்தித் துறையை கேவலப்படுத்துவதாக உள்ளது என்றும் அந்த நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், ஃபாக்ஸ்கான் இந்தியா ஆப்பிள் ஐபோன் ஆலையில், திருமணமான பெண்களை வேலை செய்ய அனுமதிக்காத விவகாரம் தொடர்பாக, தமிழக தொழிலாளர் துறையிடம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விரிவான அறிக்கை ஒன்றை கோரியுள்ளது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் "சமீபத்தில் பணியமர்த்தப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் திருமணமான பெண்கள் என்று ஃபாக்ஸ்கான் தெளிவுபடுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

அப்படி பார்த்தால் சென்னை Foxconn கிளையில் பணிபுரியும், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் திருமணமான பெண்கள் என்று பொருள்படும். இந்த விகிதம் தற்போது இந்தியாவில் இயங்கி வரும் இந்தத் துறையில் உள்ள எந்தத் தொழிற்சாலைக்கும் சாதகமாக உள்ளது" என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில், தற்போது 70 சதவீத பெண்களும், 30 சதவீத ஆண்களும் உள்ளனர், மேலும் 45,000 தொழிலாளர்களை தொட்டதன் மூலம், நாட்டிலேயே பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலையாக Foxconnனின் தமிழ்நாட்டு ஆலை உள்ளது. திருமணமான இந்து பெண்கள் உலோகங்கள் (ஆபரணங்கள் மற்றும் நகைகள்) அணிவதற்காக, பாகுபாடு காட்டப்படுவது பற்றிய கேள்விக்கு, இத்தகைய தொழிற்சாலைகளில் உலோகத்தை அணிவது ஒரு பாதுகாப்பு பிரச்சினை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. .

"உலோகங்களை அணிந்திருக்கும் எந்தவொரு நபரும் அவர் ஆணோ, பெண்ணோ, அவர்கள் தனி நபரோ அல்லது, திருமணமானவரோ அவர்களின் மதம் (இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், சீக்கியர்) என்ன என்பதை பொருட்படுத்தாமல் தொழிற்சாலையில் பணிபுரியும் போது உலோகங்களை அகற்ற வேண்டும்," என்று அந்த நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, உலோகம் அணிந்த யாரும் நிறுவனத்திற்குள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை, இது பல தொழில்களில் மற்றும் தொழிற்சாலைகளில் நடைமுறையில் உள்ள நடைமுறையாகும். 

ஃபாக்ஸ்கான் சென்னை அலுவலகத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை கிடையாதா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios