சென்னை மலர் கண்காட்சியில் கடந்த 2 நாட்களில் ரூ. 8.35 லட்சம் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.  பெரியவர்களுக்கு ரூ. 50, சிறுவர்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் ரூ.8.35 லட்சம் வசூலாகியுள்ளது. 

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் முதல்முறையாக மலர்க் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த மலர்க் கண்காட்சி, இன்றுடம் நிறைவடைகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இந்த கண்காட்சியினை தொடங்கி வைத்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை கலைவாணர் அரங்கில் தோட்டக்கலைத்துறை சார்பில் இந்த மலர்க் கண்காட்சியானது திறக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 200 க்கும் மேற்பட்ட வகையில் கண்ணை கவரும் மலர்கள் மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஊட்டி , கொடைக்கானல், மைசூரு போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது. 

கண்காட்சியில் மலர்களால் உருவாக்கப்பட்ட பறவைகள், விலங்குகள்,காய்கறிகளால் அமைக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் செல்ஃபி எடுப்பதற்கான இடங்கள் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளன.மேலும் மலர்க் கண்காட்சிக்கான நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு தலா ரூ.50, மாணவர்களுக்கு தலா ரூ.20 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று மலர்க் கண்காட்சி நடத்தப்படும் என்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தமிழக அரசு சார்பில் முதல் முறையாக சென்னையில் மலர்க் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மலர் கண்காட்சியில் கடந்த 2 நாட்களில் ரூ. 8.35 லட்சம் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ. 50, சிறுவர்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் ரூ.8.35 லட்சம் வசூலாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: அச்சறுத்தும் விபத்து.. அச்சத்தில் மக்கள்!! மதுரையில் மீண்டும் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..