அச்சறுத்தும் விபத்து.. அச்சத்தில் மக்கள்!! மதுரையில் மீண்டும் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..

மதுரையில் 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இந்த விபத்து நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 
 

Old building collapses again in Madurai ..

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நேதாஜி சாலையில் சுமார் 70 முதல் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தில் உணவகம், பழக்கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததில் கடைகள் முழுவதும் சேதமடைந்தன. மேலும் இந்த விபத்து நள்ளிரவு ஏற்பட்டதால், ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.  

இதே போல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை கீழவெளி வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சரவணன் மீது சுமார் 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே கடந்த 2020ஆம் ஆண்டில் தீபாவளியன்று பழமையான கட்டடத்தில் தீப்பிடித்து இடிந்து விழுந்ததில் தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது நேற்று நள்ளிரவில் திடீரென 70 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடம் சரிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரை மாநகரில் தொடர்ந்து பழமையான கட்டங்கள் இடித்து விழுந்து விபத்து நேரிடுவதால், மதுரையில் உள்ள பழமையான கட்டடங்களின் நிலையை தீயணைப்புத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு கட்டட உறுதி தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 

மேலும் படிக்க: தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் 'திடீர்' ஸ்ட்ரைக்.. பொதுமக்கள் அதிர்ச்சி ! அச்சச்சோ ?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios