Asianet News TamilAsianet News Tamil

செல்போன் பறிக்க முயற்சி.. சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த பெண் மரணம் - இருவர் கைது!

வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பிரீத்தி மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ப்ரீத்தியின் உயிர் பிரிந்தது.

chennai electric train cellphone snatch women died two arrested
Author
First Published Jul 8, 2023, 6:56 PM IST | Last Updated Jul 8, 2023, 7:00 PM IST

சென்னையில் கடந்த ஜூலை 2ம் தேதி மின்சார ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார் ப்ரீத்தி என்ற இளம் பெண். அப்பொழுது அவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரை அணுகிய இரு மர்ம நபர்கள் ப்ரீத்தி கையில் இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். 

இதனை எதிர்பாராத பிரீத்தி அதனை தடுக்க முயற்சித்துள்ளார், இதில் நிலை தடுமாறி ஓடும் ரயிலில் இருந்து ப்ரீத்தி கீழே விழுந்து அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். ஆனால் அங்கு அவருடைய உடல்நிலை தொடர்ச்சியாக மோசமடைந்து வந்தது. 

இதையும் படியுங்கள் : நடிகர் விஜய்க்கு பேச்சு மட்டும் போதாது.. நடிகர் விஜய்க்கு அட்வைஸ் செய்த அன்புமணி ராமதாஸ் !

இதனை தொடர்ந்து வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பிரீத்தி மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ப்ரீத்தியின் உயிர் பிரிந்தது. அவரிடம் இருந்து சம்பவத்தன்று செல்போனை பறிக்க முயன்ற இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் திருவான்மியூர் ரயில்வே காவல்துறையினர், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரையும் அடையாறு பகுதியை சேர்ந்த மணிமாறன் என்ற நபரையும் கைது செய்துள்ளனர். 

அவர்கள் இருவரும் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மருத்துவமனையில் இருந்து ப்ரீத்தியின் உடலை பெற வந்த அவரது தந்தை கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

இதையும் படியுங்கள் : ஒன்றோடொன்று பின்னி கொஞ்சி குலாவிய பாம்புகள் - வியப்புடன் பார்த்த பொதுமக்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios