Dayanidhi : மத்திய சென்னை தொகுதியில் சூரியன் உதிக்குமா.?தயாநிதி மாறன் முன்னிலை நிலவரம் என்ன.?லேட்டஸ்ட் அப்டேட்
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய சென்ன தொகுதியில் போட்டியிடும் தயாநிதி மாறன் முன்னிலை பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தீவிரம்
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு நாடு முழுவதும் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், இன்று உலகமே எதிர்பார்க்கும் இந்தியாவின் அடுத்த பிரதமருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழகத்தின் தலைமநகரான சென்னையில் உள்ள மத்திய சென்னை தொகுதி இந்தியாவில் உள்ள மிகச் சிறிய தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதியில் இங்கு மொத்தமாக 13,16,603 வாக்காளர்கள் உள்ளனர். 6,62,925 பெண் வாக்காளர்கள், 6,53,358 ஆண் வாக்காளர்கள், 20 பேர் மூன்றாம் பாலினத்தவர் உள்ளன்னர்.
Annamalai : கோவை தொகுதியில் தாமரை மலருமா.? அண்ணாமலை முன்னிலை நிலவரம் என்ன.? லேட்டஸ்ட் அப்டேட் இதோ
மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன்.?
தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், துறைமுகம் என பல முக்கிய இடங்கள் அனைத்தும் இந்த தொகுதிக்குள் வருகிறது. 1996 ஆம் ஆண்டு முதல் திமுகவின் கோட்டையாக மத்திய சென்னை தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் தயாநிதி மாறனின் தந்தை முரசொலி மாறன் 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். தயாநிதி மாறனும் இந்த தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். 2014ஆம் ஆண்டு மட்டும் தோல்வியை சந்தித்துள்ளார். தற்போது 4வது முறையாக களம் கானும் தயாநிதி மாறன் வெற்றி பெற்று மக்களவைக்கு செல்வாரா.? தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தயாநிதி மாறன் முன்னிலை வகித்து வருகிறார்.
வேட்பாளர்கள்
திமுக-தயாநிதி மாறன்-98,830 வாக்குகள்
பாஜக-வினோஜ் செல்வம்- 41,556 வாக்குகள்
தேமுதிக-பார்த்தசாரதி- 16,989 வாக்குகள்
நாம் தமிழர்-கார்த்திகேயன்- 9,134 வாக்குகள்