Asianet News TamilAsianet News Tamil

Thiruma: சிதம்பரம் தொகுதியில் மீண்டும் வாகை சூடுவாரா திருமாவளவன்.?முன்னிலை நிலவரம் என்ன.?லேட்டஸ்ட் அப்டேட் இதோ

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், நட்சத்திர வேட்பாளரான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5வநது முறையாக போட்டியிடுகிறார். இதில் 2 முறை வெற்றிப்பெற்று மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் திருமாவளவன் அதிமுக வேட்பாளரை விட 4ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உ்ள்ளார்.

 

Chidambaram VIP Candidate VCK's Thol Thirumavalavan Lok Sabha Seat Result 2024 Updates in Tamil KAK
Author
First Published Jun 4, 2024, 8:03 AM IST | Last Updated Jun 4, 2024, 3:11 PM IST

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்.?

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் இன்று பிரதமர் நாற்காழியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. ஒரு பக்கம் பாஜகவும் மறு பக்கம் இந்தியா கூட்டணியும் போட்டி போட்டு வருகிறது. இதில் தமிழ்நாட்டில் பொறுத்தவரை திமுக தலைவரும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி களம் இறங்கியுள்ளது. நட்சத்திர வேட்பாளரான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் களம் காண்கிறார். சிதம்பரம் தொகுதியில்  5 முறை போட்டியிட்ட திருமாவளவன் 2 முறை வெற்றி பெற்றுள்ளார்.

Lok Sabha Elections: மோடியின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்குமா இண்டியா கூட்டணி? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

சிதம்பரம் தொகுதி கள நிலவரம்

சிதம்பரம் மக்களவை(தனி) தொகுதி கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் பரந்து விரிந்துள்ளது. இந்த தொகுதியில் 7,49,623 ஆண் வாக்காளர்கள், 7,61,206 பெண் வாக்காளர்கள், 86 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15,10,915 வாக்காளர்கள் உள்ளனர். சிதம்பரம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் (தனி), குன்னம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் 1984, 1989. 1991 ஆகிய 3 முறையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ப.வள்ளல்பெருமான் வெற்றி பெற்றுள்ளார்.  1996-ல் திமுகவைச் சேர்ந்த சி.வெ.கணேசன் வெற்றி வெற்றி பெற்றுள்ளார். 

திருமாவளவன் வாகை சூடுவாரா.?

விசிக தலைவர் திருமாவளவன்2009 ஆம் ஆண்டும், 2014-ல் அதிமுகவைச் சேர்ந்த மா.சந்திரகாசி ஆகியோர் வெற்றி பெற்றனர். 2019-ல் மீண்டும் திருமாவளவன் வெற்றி பெற்று, எம்.பியாக இருக்கிறார். கடந்த முறை பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் கடைசி நேரத்தில் நூழிலையில் வெற்றியை பெற்றார். எனவே இன்று மீண்டும் களம் காணும் திருமாவளவன், வெற்றி வாகை சூடுவாரா.? அந்த வகையில் தற்போது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது அதிமுக வேட்பாளர் சந்திரஹாசனை விட் 4ஆயிரம் வாக்குகள் திருமாவளவன் முன்னிலையில் உள்ளார்

வேட்பாளர்கள் வாக்கு விவரம் .?

11 ஆம் சுற்று நிலவரப்படி

விடுதலை சிறுத்தைகள்-தொல் திருமாவளவன்- 2,63,589 வாக்குகள்

அதிமுக-                               சந்திரஹாசன்-                1,95,851  வாக்குகள்

பாஜக-                                  கார்த்தியாயினி-            77,999  வாக்குகள்

நாம் தமிழர்-                        ஜான்சிராணி-                31.088  வாக்குகள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios