கையாடல் குற்றவாளியாக தீர்ப்பு முடிவான ஜெயலலிதா ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள், அது இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று தமிழக அமைச்சர்களுக்கு நடிகர் சாருஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன், தமிழகத்தின் ஊழல் குறித்த பேச்சுக்கு, அவர் மீது அடுக்கடுக்கான கேள்விக்கணைகள் தமிழக 

அமைச்சர்களால் தொடுக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் மட்டுமல்லாது தமிழக பாஜக தலைவர், தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கமலுக்கு அரசியல் தெரியாது. அரசியலுக்கு வந்த பிறகு கருத்து சொன்ன பிறகு நாங்கள் கருத்து சொல்கிறோம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியிருந்தார். நான் இந்தி திணிப்புக்கு எதிராக எப்போது குரல் கொடுத்தேனோ அப்போதே அரசியலுக்கு வந்து விட்டேன் என்று கமல் கூறினார்.

நடிகர் கமல் வந்துதான் தமிழக அரசியலைக் காப்பாற்ற வேண்டிய சூழல் இல்லை என்றும், இந்தி எதிர்ப்புக்கு குரல் கொடுத்து 

அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறும் கமல், பின் இந்தி படங்களில் நடித்தது ஏன் என்று கேள்வி எழுப்பியும் இருந்தார்.

நடிகர் கமலுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், கமலுக்கு ஆதரவாக அவரின் சகோதரர் சாருஹாசன், தனது பேஸ்புக் பக்கத்தில், கையாடல் குற்றவாளியாக தீர்ப்பு முடிவான ஜெயலலிதா ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள், அது இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார், ரூ.60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்ட ஜெயலலிதா பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்? குற்றவாளியாக சிறையில் இருக்கும் சசிகலா சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால், உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

மேலும், கையாடல் குற்றவாளியாக தீர்ப்பு முடிவான ஜெயலலிதா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள், அது இல்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம் என்று சாருஹாசன் காட்டமாக பதிவிட்டுள்ளார்.