காவேரி மருத்துவமனையில் 8-வது நாளாக சிகிச்சைப் பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நலம் விசாரித்தார். அவருடன் மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் சந்திரபாபு நாயுடு விசாரித்தார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வயது மூப்பின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்படப்டது. 

கடந்த சில தினங்களுக்கு முன், திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால், உடனே சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா திரையுலகினர் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார். இதைத்தொடர்ந்து கருணாநிதியின் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும் மருத்துவர்களிடமும் சந்திரபாபு நாயுடு கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.பிறகு மதியம் 1.10 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு தனி விமானம் மூலம் மீண்டும் ஆந்திராவுக்கு புறப்பட்டு சென்றார்.