Asianet News TamilAsianet News Tamil

2 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு  உள்ளது.

Chance of rain with thunder and lightning in 6 districts in 2 hours! sgb
Author
First Published Apr 3, 2024, 5:22 PM IST | Last Updated Apr 3, 2024, 5:33 PM IST

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை மழை பெய்யுமா என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கூடிக்கொண்டே இருக்கிறது. செவ்வாய்க்கிழமை 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை கடந்திருக்கிறது.

ஈரோட்டில் 106 டிகிரி, கரூர் பரமத்தியில் 105 டிகிரி, சேலம், வேலூர், தருமபுரியில் 104 டிகிரி, திருச்சி 103 டிகிரி, கோவை, மதுரை விமான நிலையம், திருத்தணியில் 102 டிகிரி, நாமக்கல், திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி இருக்கிறது.

தனியார் மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை பிரசவங்கள் 3 மடங்கு அதிகரிப்பு!

Chance of rain with thunder and lightning in 6 districts in 2 hours! sgb

இந்நிலையில், வானிலை ஆய்வு  மையம் அளித்துள்ள புதிய அப்டேட்டில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் 106 டிகிரி வெயில் சுட்டெரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 102 -106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தும் எனவும் கூறியுள்ளது.

தென் இந்தியப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக  வெப்பம் அதிகரிக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது.

அடுத்த இரண்டு மணிநேரத்தில் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் இதை கவனிச்சீங்களா? இனி இரண்டு அடுக்கு பாதுகாப்பு கட்டாயம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios