அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்பட 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணிநேரத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னை, திருவள்ளூர் உள்பட 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவித்திருக்கிறது.
தந்திரமாக லாபம் ஈட்டிய ரயில்வே; செய்த மாற்றம் இதுதான்; அள்ளியது கோடியில்!!
இந்நிலையில், இன்று அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 21 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதனிடையே வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை காரணமாக தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக அந்த மாநில ஆட்சியர்கள் கூறியுள்ளனர்.
சத்தீஸ்கரில் மக்களுடன் உரையாடியபடி ரயிலில் பயணம் செய்த ராகுல் காந்தி!