சென்னை சென் ட்ரல் ரயில் நிலைய ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்த ரயில்வே ஊழியர் ஒருவர் அதில் கள்ள நோட்டுகள் கலந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
செங்கல்பட்டில் வசிப்பவர் தமிழரசு. இவர் ரயில்வே கூட்டுறவு பண்டக சாலையில் பணியாற்றுகிறார். ஒரு வேலையாக சென்னை வந்த தமிழரசு சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய வாசலில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்துள்ளார்.
அப்போது அவர் எடுத்த பணத்தில் 27 ஐநூறு ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழரசு ரூபாய் நோட்டுகளுடன் வங்கி அலுவலகத்துக்கும் , பெரிய காஅவல் நிலையத்திலும் புகார் அளித்தார். பணத்தையும் ஒப்படைத்தார் . ஏடிஎம் இயந்திரத்தில் தனது ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்ததில் கள்ள நோட்டுகள் வந்ததாக ரயில்வே ஊழியர் தமிழரசு பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இது பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
