மாநில கட்சிகளை போல தமிழகத்தில் தேசிய தடம் பதிக்க முடியாது என தமாகா மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா கூறினார்.
நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.
 மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். ஜெயலலிதா காலமானது குறித்து வதந்திகளைப் பரப்பி வருபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப சர்வாதிகாரத்துடன் மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த அக்டோபர் 23ம் தேதி ஒரு பேட்டியின்போது தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட போகிறது, பாஜக தமிழகத்தில் காலூன்ற போகிறது என பேசினார். அதிமுகவை வைத்து தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் தேசியக் கட்சிகள் தடம்பதிக்க முடியாது.

 ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமாகா தலைவர் வாசன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து மதுரையில் வரும் 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்றார்.