- Home
- Tamil Nadu News
- இப்ப தேர்தல் நடந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி..! விஜய், அதிமுக தலையில் இடியை இறக்கிய சர்வே முடிவு
இப்ப தேர்தல் நடந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி..! விஜய், அதிமுக தலையில் இடியை இறக்கிய சர்வே முடிவு
தமிழகத்தில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றாலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என இந்தியா டுவே, சி ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த கருத்து கணிப்பு
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணியை வலுப்படுத்துவது, மக்கள் சந்திப்பு என அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் இந்தியா டுடே மற்றும் சி ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி அரசியலில் அதிர்வலையை உருவாக்கி உள்ளது.
மூட் ஆப் தி நேஷன்
பொதுவாக தேர்தலுக்கு ஒருமாதம் முன்பாகவோ அல்லது தேர்தல் முடிவடைந்த உடன் கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ‘மூட் ஆப் தி நேஷன்’ என்ற பெயரில் மக்களின் மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினத்தை மையமாகக் கொண்டு மக்களின் அரசியல் நிலைப்பாடு தொடர்பான மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திமுக கூட்டணிக்கே வெற்றி
அந்த வகையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றாலும் திமுக, காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி சுமார் 45 சதவீத வாக்குகளுடன் 37 தொகுதிகளில் வெற்றி பெறும். அதே போன்று அதிமுக, பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 33 சதவீத வாக்குகளுடன் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு மூன்றாவது இடம்
மேலும் தமிழக்ததின் மாற்று சக்தி நாங்கள் தான் என்று சொல்லி வரும் தமிழக வெற்றி கழகத்திற்கு 15 முதல் 20 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தவெக நடத்திய ரகசிய கருத்துக் கணிப்பில் தங்களுக்கு 30 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக சொல்லி வந்தது. ஆனால் தற்போதைய கருத்துக் கணிப்பில் 15 முதல் 20 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

