சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரத்து... மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!!
சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் சிறுபான்மை சமூகத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் சிறுபான்மை சமூகத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் 1329.2 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: நியாய விலைக் கடைகளை பொலிவுறச் செய்யும் திட்டம்… திடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து தமிழக அரசு விளக்கம்!!
மேலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவிதொகை வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதாலும், மத்திய சமூகநல மற்றும் பழங்குடியின மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதையும் பின்பற்றி சிறுபான்மை மாணவர்களுக்கும் அதே முறையைப் பின்பற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகைத் திட்டம்... பயன்பெறுவது எப்படி? முழு விவரம் உள்ளே!!
இதனிடையே பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையினை நிறுத்தி இருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளதோடு மத்திய அரசு சிறுபான்மை மாணவர்களுக்குக் கல்வி தொகையை நிறுத்தி இருப்பது உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவு என்றும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.