நியாய விலைக் கடைகளை பொலிவுறச் செய்யும் திட்டம்… திடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து தமிழக அரசு விளக்கம்!!
ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நியாய விலைக் கடைகளை பொலிவுறச் செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நியாய விலைக் கடைகளை பொலிவுறச் செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நியாய விலைக் கடைகளை பொலிவுறச் செய்யும் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாநகராட்சியில் சிசிடிவி கேமரா, பொதுமக்கள் அறிந்து கொள்ள புராதான சின்னங்கள் ஓவியம் வரைந்து, திருவள்ளுவரின் ஓவியம் என அளைத்த அடிப்படை வசதியுடன் முன்மாதிரியான புது பொலிவுடன் புதிய நியாய விலைக்கடை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு, கணேஷ் நகரில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மேம்பட்டு நிதியிலிருந்து ரூ.15.78 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை புறநகர் ரயிலில் போதையில் பெண் பயணியை கட்டிப் பிடித்த ஆசாமி; சுளுக்கு எடுத்த சக பயணிகள்!!
650 குடும்ப அட்டைதாரர்களைக் கொண்டுள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள், நியாய விலை கடை முன்பு பூங்கா, மாற்றுதிறனாளிகளுக்கு என தனி வழி பாதை, மழைநீர் சேகரிப்பு, வாடிக்கையாளர்கள் அமல்வதற்கான வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வகையான அம்சங்களுடன் காஞ்சிபுரம், மாவட்டத்தின் முன்மாதிரி நியாய விலை கடையாக கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகைத் திட்டம்... பயன்பெறுவது எப்படி? முழு விவரம் உள்ளே!!
மேலும் பொதுமக்கள் அறிந்து கொள்ள புராதான சின்னங்கள் வரையப்பட்ட வண்ண வண்ண சுவர்கள், திருவள்ளுவரின் ஓவியம், குறள் மற்றும் குறளுக்கான விளக்கமும் சுவர் முகப்பில் வரையப்பட்டுள்ளது பார்வையாளர்களை கவர்ந்தது. இதுவரை 2252 நியாய விலை கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், இதுவரை 3662 நியாய விலை கடைகள் ISO தரச் சான்றிதழ் பெற்றுள்ளன.