மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ரூ.490 கோடி நிதியை வெள்ள நிவாரண பணிக்காக மத்திய அரசு விடுவித்துள்ளது. 

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னைக்கு நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுகுறித்த அறிவிப்பை X வலைதளப்பதிவில் வெளியிட்டுள்ளார்.

அவரின் பதிவில் “ அதி தீவிர மிக்ஜாம் புயல்தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை கடுமையாக பாதித்துள்ளது. சேதத்தின் அளவு மாறுபட்டிருந்தாலும், இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவைப்படும் நிவாரணத்தை நிர்வகிக்க மாநில அரசுகளுக்கு உதவ, பிரதமர் நரேந்திரமோடி
மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் 2 வது தவணையின் மத்திய அரசின் பங்கை ஆந்திர மற்றும் தமிழ்நாட்டிற்கு விடுக்க அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடியும் ஆந்திராவுக்கு ரூ. 493.60 கோடியும்விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஏற்கனவே முதல் தவணையை இரு மாநிலங்களுக்கும் விடுவிடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த முக்கியமான நேரத்தில் நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதை உறுதி செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதே போல் மற்றொரு பதிவில் “ சென்னை கடும் வெள்ளத்தை எதிர்கொள்கிறது, கடந்த எட்டு ஆண்டுகளில் இதுபோன்ற பெருவெள்ளம் ஏற்படுவது இது 3-வது முறை.. பெருநகர நகரங்கள் அதிகப்படியான மழையைப் பெறும் பல நிகழ்வுகளால் திடீர் வெள்ளத்திற்கு ஏற்படுகிறது. 

Scroll to load tweet…

இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் சென்னை வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த ரூ.561.29 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், வெள்ள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் வெள்ளத்தை தாங்கக்கூடிய வகையில் சென்னை மாறும். வெள்ளத்தைத் தணிக்கும் முயற்சிகளில் இது முதன்மையானது. நகர்ப்புற வெள்ள நிர்வாகத்திற்கான பரந்த கட்டமைப்பை உருவாக்க உதவும்.” என்று பதிவிட்டுள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மிக்ஜாம் புயல் காரனமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. சென்னை மற்றும் புறகர் பகுதிகள் முழுவதுமே தண்ணீரில் தத்தளித்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மின்சாரம், தொலைத்தொடர்பு வசதி, உணவின்றி மக்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடிய தொடங்கியதால் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் தாழ்வான பகுதிகளில் தேங்கி உள்ள அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வெள்ள பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் மக்கள் தவிக்கும் நிலையில் கார் பந்தயத்தினை நடத்த அவசரம் காட்டுவதா.! டிடிவி

இதனிடையே புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5000 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் மத்திய அரசு ரூ.450 கோடி நிதி ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.