Asianet News TamilAsianet News Tamil

இஸ்ரேல் சாப்ட்வேர் மூலம் ஒட்டுக் கேட்கிறது தமிழக உளவுத்துறை; அதிமுக பகீர் குற்றச்சாட்டு!

அதிமுகவின் தேர்தல் வியூகங்களை மு.க.ஸ்டாலினுக்குத் தெரியப்படுத்துவதற்காக செல்போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது என்றும் இஸ்ரேலில் இருந்து ரூ.40 கோடிக்கு வாங்கப்பட்ட சாப்ட்வேரை உளவுத்துறை பயன்படுத்துகிறது என்றும் இன்பதுரை குறிப்பிட்டுள்ளார்.

Cell phones are tapped to inform MK Stalin about opposition election strategies: AIADMK sgb
Author
First Published Apr 13, 2024, 7:40 PM IST

எதிர்க்கட்சிகளின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்றும் அதற்காக இஸ்ரேலில் இருந்து ரூ.40 கோடிக்கு உளவு பார்க்கும் மென்பொருள் வாங்கப்பட்டுள்ளது என்றும் அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

தமிழக உளவுத்துறை சட்டவிரோதமாக எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதாக அதிமுக சார்பில் அக்கடசியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தலைமைத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "தமிழக உளவுத்துறை அதிகாரிகள் பெகாசஸ் உள்ளிட்ட மென்பொருள்களை பயன்படுத்தி எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர்கள், உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் வியூகங்களை தினமும் தமிழக முதல்-அமைச்சருக்கு தெரியப்படுத்தும் வகையில் செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறது எனவும் இன்பதுரை குறிப்பிட்டுள்ளார். மேலும், இதற்காக இஸ்ரேலில் இருந்து ரூ.40 கோடிக்கு உளவு மென்பொருள் வாங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"உளவுத்துறையின் இந்த நியாயமற்ற செயல்பாடு, நேர்மையான தேர்தல் என்ற நோக்கத்தையே சிதைக்கிறது. உளவுத்துறையின் நடவடிக்கை அரசமைப்புக்கு எதிரானது. கருத்து உரிமை சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது. எனவே தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில் வேலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அதிமுக சார்பில எழுதிய கடிதத்தில் கூறப்பட்டடுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாகக் கூறியதை அடுத்து, அதே குற்றச்சாட்டை அதிமுகவும் எழுப்பியிருக்கிறது. அதிமுகவும் பாஜகவும் கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாக திமுக விமர்சிக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios