Asianet News TamilAsianet News Tamil

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ… திமுக எம்பி ஆ.ராசா நேரில் ஆஜர்!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் திமுக எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜரானார். 

cbi filed the charge sheet in the case of asset embezzlement and dmk mp a raja appeared in person
Author
First Published Jan 10, 2023, 11:53 PM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் திமுக எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜரானார். திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக கூறி கடந்த 2015 ஆம் ஆண்டில் சிபிஐ அவர்மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் 7 ஆண்டுகள் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்கள் மீது கடந்த மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: மாநில அரசு, மத்திய அரசு என வரும்போது யார் சொல்வதைதான் கேட்க வேண்டும்... ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி பதில்!!

அதில், வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக ரூ.5.53 கோடி சொத்துக்களை குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு நீதிபதி டி.சிவகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அப்போது, குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து வழக்கு அடுத்தக்கட்ட விசாரணைக்காக பிப்.8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios