Asianet News TamilAsianet News Tamil

மாநில அரசு, மத்திய அரசு என வரும்போது யார் சொல்வதைதான் கேட்க வேண்டும்... ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி பதில்!!

மாநில அரசு, மத்திய அரசு என்று வரும்போது மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

when it comes to the state govt and central govt we should listen to central govt says governor rn ravi
Author
First Published Jan 10, 2023, 9:41 PM IST

மாநில அரசு, மத்திய அரசு என்று வரும்போது மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை ஆளுநர் மாளிகையில் எண்ணித்துணிக என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று இந்திய குடிமைப் பணி நேர்முக தேர்வை எதிர்கொள்ள உள்ள 80 பேருடன் உரையாடினார். பின்னர் பேசிய அவர், குடிமைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நீங்கள் பல அதிகாரிகளையும், மக்களையும் சந்திப்பவர்களாக இருப்பீர்கள். எனவே, சிரித்த முகமாக இருப்பதோடு, உங்களுடைய பர்சனாலிட்டி மிக முக்கியமானது. ஆண்கள் கோட்சூட் எடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம்... முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்!!

பெண்கள் எப்படியும் சேலை தான் அணிவீர்கள். சேலை அணியத் தெரியாதவர்கள் சீக்கிரம் அதற்கு பழகிக்கொள்ளுங்கள். உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நன்றாக கேள்வியை உள்வாங்கிக் கொண்டு பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பார்வை இருக்கும். உங்களுடைய எண்ணங்களும், பார்வைகளும் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதனை அமல்படுத்துவது மட்டும் தான் இந்திய குடிமைப் பணி அதிகாரியின் கடமை. இந்திய அரசாங்கத்தின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக்கூடாது. எந்த சட்டமும் 100 சதவீதம் முழுமையானது இல்லை என்பது உண்மை.

இதையும் படிங்க: 10 ஆயிரம்.!! மானியத்தில் மின் மோட்டார் பம்புசெட்.. விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்!

ஒரு விஷயத்தைப் பற்றி, ஒரு பிரபலம் கருத்து சொல்கிறார் என்பதால் அது உண்மையாக இருந்து விடமுடியாது. அவர் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், அது அவருடைய பார்வை அவ்வளவு தான் என்றார். அப்போது ஆளுநரிடம் மாநில அரசும், மத்திய அரசும் இரு வெவ்வேறு கருத்துகளை தெரிவிக்கும் போது யார் பக்கம் நிற்க வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசு, மத்திய அரசு என்று வரும்போது சந்தேகமே இல்லை. இந்திய குடிமைப் பணிகள் அதிகாரிகள் மத்திய அரசின் மூலம், மத்திய அரசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே, அவர்கள் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios