Asianet News TamilAsianet News Tamil

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம்... முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்!!

அனைத்து சமுதாயம் உள்ளடக்கிய அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியிருக்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

anbumani ramadoss wrote letter to cm stalin regarding avaniyapuram Jallikattu issue
Author
First Published Jan 10, 2023, 7:24 PM IST

அனைத்து சமுதாயம் உள்ளடக்கிய அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியிருக்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டிக்கும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிராம நிர்வாகம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது.

இதையும் படிங்க: தமிழகத்தைப் போல பீகாரில் ஆளுநர் செய்த சம்பவம்! நடந்தது என்ன?

இந்த நிலையில் அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையம் வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் இதுகுறித்து கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சனையை ஆராய்ந்து பார்த்ததில் அவனியாபுரத்தில் 4க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பின்னர் ஒரே ஜல்லிக்கட்டு ஆக நடத்திட அரசு உத்தரவிட்ட பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

இதையும் படிங்க: 10 ஆயிரம்.!! மானியத்தில் மின் மோட்டார் பம்புசெட்.. விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்!

இந்த ஜல்லிக்கட்டில் தெங்கால் விவசாய சங்கம் சார்பில் ஏ.கே. கண்ணன், பாக்கியம் ஆகியோர் பொருளாதாரம் ஈட்டும் நோக்கத்தில் ஈடுபட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே உறுப்பினர் ஆக்கிக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு உள்ளனர். மேலும் அவர்கள் பிற சமுதாயத்தினரை தக்க மரியாதை தரவில்லை என தெரிகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தனி நபருக்கோ அல்லது தனி ஒரு அமைப்புக்கோ அனுமதி வழங்காமல் இந்த ஜல்லிக்கட்டை அவனியாபுரம் அனைத்து சமுதாயம் உள்ளடக்கிய அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியிருக்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios