புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி – வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய கூட்டமைப்பினர் புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

2016-17-ஆம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு மற்றும் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு அமைக்க வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

வறட்சியின் காரணமாக தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணமடைந்த விவசாயிகளுக்கு தலா ரூ.10 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி – வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

நெடுவாசல் ஐட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பினர் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதி தலைமை வகித்தார். இதில் மெய்யநாதன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் முகமதலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செங்கோடன், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அஸ்ரப்அலி, தி.மு.க.வை சேர்ந்த சந்திரசேகரன், இந்திய விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தனபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மாதவன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.