Asianet News TamilAsianet News Tamil

உஷார் மக்களே.. கோவை ஆட்சியரின் பெயரில் பண மோசடி கும்பல்.. அம்பலப்படுத்திய ஆட்சியர் !

Kovai Collector : கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் நலம் விசாரிப்பது போல பணம் அனுப்பும்படி கேட்கப்படுகிறது. 

Cash fraud in the name of Coimbatore Collector sameeran kovai Police investigation start
Author
First Published Jun 22, 2022, 3:46 PM IST

கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வருபவர் ஜி.எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ். இவர் திறம்பட தனது பணிகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும், குறைகளுக்கு தீர்வு காண்பதிலும் விரைவாக செயல்படுபவர் என்று பெயர் பெற்றவர். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் நலம் விசாரிப்பது போல பணம் அனுப்பும்படி கேட்கப்படுகிறது. 

Cash fraud in the name of Coimbatore Collector sameeran kovai Police investigation start

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டதன் போரில் போலீஸார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்,  போலி வாட்ஸ் ஆப் கணக்குகளில் இருந்து தனது பெயரைப் பயன்படுத்தி பணம் பறிக்க முயல்கின்றனர். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

இதுபோன்ற மோசடி கும்பல் முதலில் பிரபலங்கள், தொழிலதிபர்கள் பெயரில் போலி கணக்கை தொடங்கி மோசடி செய்தனர். தற்போது மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளது.

இதையும் படிங்க : EPS Vs OPS : எல்லாமே முடிஞ்சுபோச்சு.! அதிமுகவை கைப்பற்றும் இபிஎஸ்..தர்ம சங்கடத்தில் ஓபிஎஸ்

இதையும் படிங்க : Thalapathy Vijay : எங்களின் ஒற்றை தலைமையே.! அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்.!

Follow Us:
Download App:
  • android
  • ios