Asianet News TamilAsianet News Tamil

துணை வேந்தர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு!

Case registered under Violence Prevention Act
Case registered under Violence Prevention Act
Author
First Published Nov 7, 2017, 11:53 AM IST


கோவை பாரதியார் பல்கலையின் துணை வேந்தர் கணபதி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து துணை வேந்தர் கணபதி தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோயம்புத்தூரில் பாரதியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு துணைவேந்தராக கணபதி பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. பணி நியமனத்தல் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாணவர்களை சாதி பெயர் சொல்லி திட்டியதாகவும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளரான லட்சுமி பிரபாகரன், துணைவேந்தர் கணபதி மீது சாதி பெயரை சொல்லி திட்டியதாக கோவை, தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். 

இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணையில், துணைவேந்தர் கணபதி, முனைவர் பட்ட ஆய்வாளர் லட்சுமி பிரபாகரனை சாதி பெயர் சொல்லி திட்டியது உறுதி செய்யப்பட்டது. துணைவேந்தர் கணபதி மீதான புகார் உறுதியானதை அடுத்து கோவை வடவள்ளி காவல் நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளது. கணபதி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த பாரதியார் பல்கலை கழக துணை வேந்தர் கணபதி, தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கோவை வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios