case in 2 categories who badly speak about tamilisai soundararajan

திருச்சி

தமிழிசை சௌந்தரராஜன் பற்றி சமூக வலைதளங்களில் கேவலமாக பேசிய இளம்பெண் மீது போலீஸ் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பற்றி கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களில் பெண் ஒருவர் அவதூறாகவும் மிகவும் கேவலமாகவும் பேசி வருகிறார். 

இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அறிந்த பா.ஜ.க.வினர் அந்த பெண் யார்? என்று விசாரித்தபோது திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து அந்தப் பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. புறநகர் மாவட்டத் தலைவர் மனோகர் ராஜன், மணப்பாறை ஒன்றியத் தலைவர் சித்தாநத்தம் சுப்ரமணி, மாவட்டப் பொருளாதாரபிரிவு துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்தீபக் உள்ளிட்டோர் நேற்று காலை மணப்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளர் கென்னடியிடம் புகார் மனு கொடுத்தனர்.

அதில், "அவதூறாகவும், தரக்குறைவாகவும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை பேசிய பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி இருந்தனர். 

அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் விசாரணை நடத்தியதில் தமிழிசை சௌந்தரராஜன் பற்றி அவதூறாக பேசியதாக சூர்யா ஆரோ என்ற இளம்பெண் மீது காவலாளர்கள் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.