Asianet News TamilAsianet News Tamil

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக பால் நிறுவனங்கள் வழக்கு - உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு!!

case against rajendra balaji postponed by HC
case against rajendra balaji postponed by HC
Author
First Published Aug 3, 2017, 11:00 AM IST


அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

தனியார் பால் நிறவனங்களில் வேதியியல் பொருள் கலக்கப்படுவதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த மே மாதம் 24 ஆம் தேதி குற்றம் சாட்டியிருந்தார்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் பால் நிறுவனங்களான ஹட்சன், டோட்லா மற்றும் விஜய் பால் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

கலப்பட பால் நிறுவன பெயர்களைக் கூறாமல், பொதுவாக குற்றம் சாட்டியதால் வணிகம் பாதிக்கப்பட்டதாகவும், பொது இடத்தில் யார் பேசினாலும் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள் எனவும் பால் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தன.

case against rajendra balaji postponed by HC

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆதாரம் இன்றி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேசக் கூடாது என்று அமைச்சருக்கு தடை விதித்தது.

இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை நாளை மறுநாள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஹட்சன், டோட்லா, விஜய் பால் நிறவனங்கள் தரப்பு வாதங்கள் உயர்நீதிமன்றத்தில் முடிவடைந்ததை அடுத்து, அமைச்சர் தரப்பு வாதத்திற்காக விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios