சிவகங்கை

மதுரைக்கு கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த சிவகங்கையைச் சேர்ந்த குடும்பத்தினர் கார் விபத்தில் சிக்கினர். இதில், மருத்துவமனை கொண்டுச் செல்லும் வழியில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நால்வரும் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

sivagangai க்கான பட முடிவு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கல்லுக்கட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீராச்சாமி மகன் சரவணகுமார் (40). இவரது மனைவி பிரபாதேவி. இத்தம்பதி மற்றும் உறவினர்கள் மூவர் என மொத்தம் ஐந்து பேராக மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டியில் உள்ள கோயிலுக்குச் சென்றார். நால்வரும் காரில் பயணித்தனர்.

சாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்று அதிகாலையில் ஐவரும், அதே காரில் ஊருக்குத் திரும்பினர். மதுரையில் உள்ள பூமங்கலம்பட்டி அருகே கார் வந்துக் கொண்டிருக்கும்போது திடிரென கட்டுப்பாட்டை இழந்தது. 

car accident க்கான பட முடிவு

இதில், நிலைத்தடுமாறி ஓட்டுநர் காரை அங்கிருந்த பாலத்தின் மீது கொண்டுச்சென்று மோதினார். இதில் காரில் இருந்த ஐவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், இவர்களில் சரவணகுமார் மேலூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மனைவி பிரபாதேவி மற்றும் உறவினர்கள் மூவரும் பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுச்சென்று அனுமதிக்கப்பட்டனர். 

dead க்கான பட முடிவு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொட்டாம்பட்டி காவலாளர்கள் சரவணகுமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்து விபத்து நடக்க என்ன காரணம் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

police investigation க்கான பட முடிவு