வேலூர் அருகே அதிவேகமாக சென்ற கார் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வேலூர் அருகே அதிவேகமாக சென்ற கார் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த 7 பேர் ஒரு காரில் குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது பேரணாம்பட்டு சாலையில் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி புளியமரத்தில் மோதியது. 

மரத்தில் மோதிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் கல்லூரி மாணவர்கள் முகமது ஷபான், இம்ரான் மற்றும் உசேன் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 4 பேர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தி வருகின்றனர்.