காஞ்சிபுரம் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சென்னை போரூரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர்களது உறவினரான காஞ்சிபுரத்தை அடுத்த நாயகன்குப்பதை சேர்ந்த ஒருவரது 3 மாத குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. இதுபற்றி துக்கம் விசாரிப்பதற்காக இன்று காலைகஜேந்திரன், ஜெகதாம்மாள், அவரது மகன்கள் வள்ளியப்பன், நாகேந்திரன், அவரது மனைவி சித்ரா (30) உள்பட 7 பேர் காரில் புறப்பட்டனர். காரை மாங்காடை சேர்ந்த சக்திவேல் (35) ஓட்டி சென்றுள்ளார்.

 

அதிகாலை வாலாஜாபாத் அருகே உள்ள தென்னேரி ஒரகடம் கூட்டுச் சாலையில் கார் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதமாக லாரி கார் மீது மோதியது. இதில் கஜேந்திரனின் மனைவி ஜெகதாம்பாள், அவரது உறவினர் சித்ரா, கார் ஓட்டுநர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த வள்ளியப்பன், நாகேந்திரன், அஞ்சுகம், விஜயலட்சுமி, அவரது மகள் ரபியா உள்பட 6 பேரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுரையும் கைது செய்துள்ளனர்.