Can allow the tamilnadu government - Kerala petition in Supreme Court

முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த தமிழக அரசை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

மேலும் அந்த மனுவில் முல்லை பெரியாறு அணையை பராமரிக்க தங்களுக்கே உரிமை உள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து பதிலளிக்குமாறு கேரளா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து கேரளா அரசின் சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த தமிழக அரசை அனுமதிக்க முடியாது எனவும், முல்லை பெரியாறு அணை அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் ஆய்வு நடத்த முடியாது எனவும் கேரள அரசு மனுதாக்கல் செய்துள்ளது.