Asianet News TamilAsianet News Tamil

"இந்தியா கூட்டணி" வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம்.. தயாராகும் அமைச்சர் உதயநிதி - வெளியான அட்டவணை!

Udhayanidhi Stalin Campaign : வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இன்று மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முதல்வர் ஸ்டாலின்.

campaign supporting India Alliance candidates Minister Udhayanidhi stalin schedule released ans
Author
First Published Mar 22, 2024, 10:18 PM IST

இந்நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடக்க உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு, திமுக கழக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் "இந்தியா கூட்டணி" வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரிக்க உள்ளார் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவருடைய பயணத்திட்டம் குறித்த அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.

நாளை சனிக்கிழமை மார்ச் 23ம் தேதி மாலை 5 மணிக்கு இராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகே உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது பிரச்சாரத்தை தூங்குகின்றார். மேலும் மாலை 6:00 மணிக்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலும், இரவு 7.15 மணிக்கு விருதுநகர் மாவட்டம் திருமங்கலம் பகுதியிலும், இரவு 8.30 மணிக்கு தேனி உசிலம்பட்டி பகுதியிலும், இரவு 9.15 மணிக்கு தேனியின் ஆண்டிப்பட்டி பகுதிகளும் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார். 

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர்: யார் இந்த வி.எஸ்.நந்தினி?

மேலும் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தேனி மாவட்டம் வடக்கு பகுதியிலும், காலை 11 மணிக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளும், மாலை 5 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு பகுதியிலும், மாலை 6:15 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் பகுதியில், இரவு 7 மணிக்கு மதுரை வடக்கு பகுதியிலும், இரவு 7.45 மணிக்கு மதுரை மாநகரிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதேபோல் 25ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் தெற்கு பகுதியிலும், மாலை 6 மணிக்கு செய்யாறு திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணியிலும், இரவு 7 மணிக்கு வந்தவாசி திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணையிலும், இரவு 8 மணிக்கு சேத்துப்பட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணியிலும், இரவு 9 மணிக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு திருவண்ணாமலையில் துவங்கி இரவு 9:30 மணிக்கு வேலூர் மாவட்டத்தில் தனது பிரச்சாரத்தை முடிக்கும் அவர் அன்றைய நாளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இறுதியாக மார்ச் 27 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு அரக்கோணம் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொள்ளுவர் மாலை 7:30 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் தனது பிரச்சாரத்தை முடிக்கின்றார்.

காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் அறிவிப்பு!

Follow Us:
Download App:
  • android
  • ios