Buckingham Canal to get new look - collector consultant meeting with private company

திருவள்ளூர்

எண்ணூர் துறைமுகம் முதல் பழவேற்காடு வரை உள்ள பக்கிங்காம் கால்வாயை தூர்வாருவது தொடர்பாக தனியார் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லி, ஆலோசனை நடத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இந்தக் கூட்டத்துக்கு, ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில், "பக்கிங்காங் கால்வாயை தூர் வாருதல், தனி நபர் கழிப்பறை கட்டுதல்" போன்றவை குறித்து ஆட்சியர் விளக்கினார்.

அதன்பின்னர், சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பொது சுகாதாரம் குறித்து, ஒன்றிய அதிகாரிகளுடன் ஆட்சியர் சுந்தவல்லி ஆலோசனை நடத்தினார்.

அப்போது, "கிராம ஊராட்சிகளில் கழிப்பறை இல்லாத அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை கட்டுதல்" குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை அளித்தார்.