இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் உள்ள பேரையூர் ஊராட்சியில் கடந்த மூன்று பி.எஸ்.என்.எல் சேவை தடைப்பட்டுள்ளதால்  இதனையே நம்பியுள்ள அரசு அலுவலகங்கள் முடங்கியுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள், அரசு ஊழியர்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். இருந்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இந்த விஷத்தில் மாவட்டத் தொலைத் தொடர்பு அதிகாரிகள் தலையிட்டு இணையதள சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.