நாமக்கல் அருகே திருமணத்தன்று இரவு முதலிரவுக்கு மணப்பெண் மறுப்புத் தெரிவித்தால் விரக்தியடைந்த  மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் கடந்த திங்கட்கிழமை திருமணம் செய்து கொண்டார்.

அன்று இரவு மணமக்கள் இருவருக்கும் உறவினர்கள் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் மணமகள் திடீரென முதலிரவுக்கு மறுத்து மணியிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து விரக்தியடைந்த மணி வீட்டைவிட்டு வெளியேறினார். அவரை மணமகன் வீட்டாரும் உறவினர்களும் கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில்  காட்டுப் பகுதியில் மணி மரத்தில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

அவரது சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிக்கு  மனநலம் பாதிக்கப்பட்ருந்ததாகவும், சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைந்ததாகவும் தெரிய வந்ததது.

இதனிடையே சுகன்யாவின் விருப்பம் இன்றி அவருக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததும் மணி மீதிருந்த பயம் காரணமாகவே அவர் முதலிரவுக்கு மறுத்ததும் விசாரணையில் தெரிய வந்ததது.

ஆனால் மணமகள் முதலிரவுக்கு மறுத்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மணி தூக்குப் போட்டு தறகொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.