திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை தனது நண்பர்களோடு சேர்ந்து  கற்பழித்து கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கச்சிராயபாளையயத்தை சேர்ந்த அழகப்பிள்ளை மகள் அமராவதி. இவர் நர்சிங் படித்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி இரவு 8 மணியளவில் அமராவதியை காணவில்லை.  அவரை குணசேகரன் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில்பெற்றோர்  போலீசில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தண்ணீர் இல்லாத கிணற்றில் அமராவதி சடலமாக கிடந்தார். விசாரணையில் குணசேகரன், அமராவதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 

கைது செய்யப்பட்ட காதலன் அளித்த வாக்குமூலத்தில்,
கடந்த ஒரு மாதமாக அமராவதி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். இதனால் அவரை  கொலை செய்ய முடிவு செய்து, கடந்த 28ம் தேதி மாலை நானும் என் நண்பர்கள் கோமுகி தாசன், ரட்சகன் ஆகியோர் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மது அருந்திக்கொண்டிருந்தோம்

அப்போது இரவு 8 மணிக்கு அமராவதிக்கு போன் செய்து ஓடிப்போய் திருமணம் செய்யலாம் வா என கூறினேன். இதை நம்பிய அமராவதியும் வந்தார். போதையிலிருந்த நான் அமராவதியை கற்பழித்தேன், பிறகு கோமுகிதாசன், ரட்சகன் மற்றும் எனது உறவினரான பிளஸ் 1 மாணவன் என மூன்று பேரும் மாறி மாறி கற்பழித்தார்கள்.  

பின்னர் மூன்று பேரும் சேர்ந்து அமராவதியை கொலை செய்து கிணற்றில் வீசினோம். .இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, கச்சிராபாளையம் போலீசார் கோமுகிதாசன், ரட்சகன் மற்றும் பதினாறு வயது பள்ளி மாணவன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.