சென்னைக்கு புறப்பட்ட பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினர்… முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்!!
பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க சென்னைக்கு புறப்பட்டனர்.
பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க சென்னைக்கு புறப்பட்டனர். 2019 ஆம் ஆண்டு ஓசூர் வனப்பகுதியிலிருந்து தாயை பிரிந்த குட்டி யானை பொம்மி முதுமலை யானைகள் முகாமுக்கு கூட்டி வரப்பட்டது. இதனை பழங்குடி இனத்தை சேர்ந்த பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோர் பராமரித்து வந்தனர். இவர்களின் வாழ்க்கையை தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ் என்ற பெயரில் ஊட்டியைப் பூர்விகமாகக் கொண்ட ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி இயக்கியிருந்தார்.
இதையும் படிங்க: பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டல்… விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி கைது!!
இந்த திரைப்படம் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது. இதை அடுத்து பல்வேறு தரப்பினர் படக்குழுவினருக்கும் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொம்மன் பெள்ளி தம்பதியினரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (15.03.2023) சந்திக்க உள்ள நிலையில் இதற்காக பொம்மன் தர்மபுரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு நேற்று புறப்பட்டார்.
இதையும் படிங்க: திண்டிவனத்தில் தடையை மீறிய எச்.ராஜா! மடக்கிப் பிடித்து கைது செய்த போலீஸ்!
அதேபோல் பொம்மனின் மனைவி பெள்ளி முதுமலையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார். கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது உள்ளிட்ட அதிகாரிகள் அவரை வழி அனுப்பி வைத்தனர். முதுமலை மற்றும் டாப்ஸ்லிப் முகாம்களில் பணியாற்றும் 10 பாகன்களுக்கும் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அனைத்து பாகன்களுக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.